பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு ஊழியருக்கு 'ஷீல்டு கவர்'

Added : மே 21, 2020
Share
Advertisement

மதுரை : கொரோனா தடுப்பு களப் பணியாளர்களுக்கு, முகத்தை முற்றிலும் மறைக்கும், 'ஷீல்டு கவர்' வழங்க, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, கேள்வி எழுப்பிய, உயர் நீதிமன்ற மதுரை கிளை, அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மதுரை, சொக்கிகுளம் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணியில் மருத்துவம், போலீஸ் உட்பட பல்வேறு துறையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சமூக பரவல் மூலம், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள களப் பணியாளர்களுக்கு கவச உடை, முக கவசம், கையுறை, ரப்பர் பூட்ஸ் போன்ற தற்காப்பு உபகரணங்கள் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கோரியிருந்தார்.

நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. தமிழக வருவாய் நிர்வாக கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனு:கொரோனா தடுப்பு பணிக்கு, 350.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து களப்பணியில் உள்ளவர்களுக்கு கிருமி நாசினி, உணவு, தங்குமிடம், முகக் கவசம், கையுறை, தற்காப்பு கருவிகள், ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் போலீஸ் துறைக்கு, 149.79 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 6.50 கோடி ரூபாயில், மருத்துவ தற்காப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு, குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிபதிகள், 'களப்பணியாளர்களுக்கு முகத்தை முற்றிலும் மறைக்கும், 'ஷீல்டு கவர்' வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.'இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா' என, கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து, 'அரசு தரப்பில், வரும், 27ல், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தர விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X