சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு அதிகாரி, 'பூட்டு'

Added : மே 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு அதிகாரி, 'பூட்டு'

கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

வருவாய் துறை அதிகாரிகள், பள்ளியை ஆய்வு செய்தனர்.பள்ளி அலுவலகம் திறந்து செயல்படுவதும், மாணவர் சேர்க்கைக்காக, வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு, நுழைவுத்தேர்வு நடத்துவதும் தெரிந்தது.தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் வெளியேற, அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின், பள்ளிக்கு பூட்டு போட்டு, சாவியை எடுத்துச் சென்றனர்.நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், ''அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-மே-202021:36:02 IST Report Abuse
A.George Alphonse இதெல்லாம் சும்மா ஒரு போக்குகாட்டல் தான்.தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை அடிமைகள்போல் நடத்தி இதுபோல் ஊரடங்குநேரத்தில் நடத்துவது மிக கண்டிக்கத்தக்கது.பள்ளி பூட்டப்பட்டதால் இந்த ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் அல்வாதான்.பாவம் இந்த அப்பாவிகள்.
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
24-மே-202008:22:52 IST Report Abuse
Jay? பள்ளி பெயரை பார்த்தீங்களா, எல்லாம் உங்க ஆளுங்க தான். வெளுத்தா சரியாகிடும்....
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-மே-202013:35:25 IST Report Abuse
madhavan rajan நிச்சயம் அந்த பள்ளியின் பின்புலத்தில் ஒரு அரசியல்வியாதி இருப்பார். சரிக்கட்ட வேண்டியவர்களை சரிக்கட்டி பள்ளி சரியான நேரத்தில் செயல்பட்டு இயங்கும். இதெல்லாம் தமிழகத்தில் சாதாரணமப்பா...............
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
21-மே-202015:43:37 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இவ்வளவு கொரோனா ரணகளத்திலும் ... பசங்களுக்கு புதிய அட்மிஷன் காசு கல்லா அடிப்பதே இவர்களின் நோக்கம்..இவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசாருக்கு நன்றி.. விடாதீங்க ஆபீசர் பிடிச்சு லாடம் அடிங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X