நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு அதிகாரி, பூட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு அதிகாரி, 'பூட்டு'

Added : மே 21, 2020 | கருத்துகள் (4)
Share
 நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு அதிகாரி, 'பூட்டு'

கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

வருவாய் துறை அதிகாரிகள், பள்ளியை ஆய்வு செய்தனர்.பள்ளி அலுவலகம் திறந்து செயல்படுவதும், மாணவர் சேர்க்கைக்காக, வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு, நுழைவுத்தேர்வு நடத்துவதும் தெரிந்தது.தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் வெளியேற, அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின், பள்ளிக்கு பூட்டு போட்டு, சாவியை எடுத்துச் சென்றனர்.நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், ''அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X