சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 65 லட்சம் கள்ள நோட்டு எம்.பி.ஏ., பட்டதாரி கைது

Added : மே 21, 2020
Share
Advertisement
 ரூ. 65 லட்சம் கள்ள நோட்டு எம்.பி.ஏ., பட்டதாரி கைது

நாகர்கோவில் : தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பலின் தலைவர் மணிகண்டன் 31, நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் மூங்கித்தாம்பட்டியில் ஒரு டாஸ்மாக் கடையில் 200 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து மது வாங்க முயன்ற சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருமயத்தை சேர்ந்த முகமது இப்ராகிம் 27, முகமது நசிருதீன் 30, ராமச்சந்திரன் 30 கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கத்தில் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் ரூ.49, 900 பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரியை சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்தது. எம்.பி,ஏ. பட்டதாரியான அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வீட்டில் இருந்து இரண்டாயிரம், 500, 200, 100, 20, 10 என 65 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள், லேப்டாப், ஜெராக்ஸ் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னையில் பொருட்காட்சி ஏஜன்டாக பணியாற்றிய மணிகண்டன் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கி கள்ள நோட்டு அச்சிட்டு மாநிலம் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதை குறிவைத்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X