சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை வாளையார் எல்லையில் கோபுரம் அமைத்து கண்காணிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement
 கோவை வாளையார் எல்லையில்   கோபுரம் அமைத்து கண்காணிப்பு

கோவை : கேரளாவில் இருந்து வரும் கனரக வாகனங்களை சோதனையிட, வாளையார் எல்லையில், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்க, மாநிலம் விட்டு மாநிலம் வரும் வாகனங்கள், எல்லைப் பகுதிகளில், தீவிர சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், பலர் கனரக வாகனங்களில் மறைந்து, பயணிக்கின்றனர்.மருத்துவ பரிசோதனைக்கு தப்புவதால், இவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து, கோவை மாவட்டத்துக்குள் கனரக வாகனங்களில் மறைந்து பயணிப்போரை கண்டறிய, வாளையார் எல்லையில், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

போலீசார் கூறுகையில், 'கேரளாவிலிருந்து வரும் டேங்கர், டாரஸ் லாரிகளில், பலர் பயணிக்கின்றனர். இவர்களை கண்டறிய, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. 'போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவோர், சர்வீஸ் ரோட்டில் சோதனை செய்யப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X