இந்தியா

பத்திரிகை துறைக்கு பிரதமர் உதவ வேண்டும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'கொரோனா ஊரடங்கினால் நலிவடைந்துள்ள பத்திரிகை துறைக்கு, மிகப்பெரிய அளவில் பிரதமர் உதவி செய்ய வேண்டும்' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:மேட்டூர் அணையை ஜூன் மாதம் திறப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், காரைக்கால் கடைமடை பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய, 1 டி.எம்.சி., தண்ணீரை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.ஒரு டி.எம்.சி., தண்ணீரை பெறுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு பொதுப்பணி, விவசாய துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் கூட்டத்தை கூட்டி, ஒரு டி.எம்.சி., தண்ணீரை மாநிலத்திற்கு பெறுவதற்கான வழிமுறைகளை முடிவு செய்து, தமிழக அரசுடன் பேசுவோம்.கொரோனா ஊரடங்கினால், நாட்டில் உள்ள பத்திரிகைகள் இப்போது நலிந்துள்ளன. மிகப் பெரிய அளவில் விற்பனை குறைந்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பத்திரிகையாளர்கள் அமைப்பும் மனு கொடுத்துள்ளது. இந்த மனுவை பிரதமர் பரிவோடு கவனித்து, பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X