இந்தியா

ஜிப்மரில் 3 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த, பண்ருட்டி மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 64 வயது மூதாட்டி, அவரது உறவினர்கள் இருவர், கடந்த மார்ச் 30ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இருவர், மே 7ம் தேதி ஜிப்மருக்கு மாற்றப்பட்டனர். 5 பேரும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தனர்.இவர்களில் பண்ருட்டியை சேர்ந்த 64 வயது மூதாட்டி, அவரது உறவினர் இருவர் என மூன்று பேருக்கு, சமீபத்திய பரிசோதனையில், கொரோனா தொற்று குணமானது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரும் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் தொடர்ந்து ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X