இந்தியா

இளம்பெண் தற்கொலை

Added : மே 21, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்:குழந்தையை பார்க்க முடியாததால் மனமுடைந்த இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.லிங்காரெட்டிபாளையம் பெரிய தெருவை சேர்ந்தவர் சரண்யா, 30. இவருக்கும் திருபுவனையை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணமாகி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே தகராறு காரணமாக, சரண்யா தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.கணவரிடம் உள்ள குழந்தையை, அழைத்துவந்து காண்பிக்குமாறு பலமுறை கேட்டும் அழைத்து வராததால் மனமுடைந்த சரண்யா, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டேரிக்குப்பம் போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால், தாசில்தார் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X