இந்தியா

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரியாங்குப்பம் மார்க்கெட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, சுகாதார உதவி ஆய்வாளர் கரிகாலன் வரவேற்றார். தலைமை மருத்துவ அதிகாரி தாரணி , சுகாதார மேற்பார்வையாளர் தேன்மொழி, ஆலோசகர் சின்னத்தம்பு முன்னிலை வகித்தனர். ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தேசிய டெங்கு நாள் குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், டெங்கு நோய் பற்றியும், அதை தடுக்கும் முறை பற்றியும் பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் பிரகாஷ், வீடுகளில் உள்ள பொருட்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றுவது குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன், டெங்கு எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க, வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உறுதிமொழியேற்றனர்.கிராமப்புற செவிலியர்கள், பைலேரியா களப்பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். சுகாதார உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X