இந்தியா

வாய்க்கால்களை தூர் வாராமல் மதுக்கடை திறப்பில் அரசு கவனம்; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி;'மேட்டூர் அணை ஜூன் மாதம் திறக்கப்பட உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் ஏரி, குளம், வாய்க்கால்களை முழுமையாக துார் வார நடவடிக்கை எடுக்காமல், மதுக்கடை திறப்பில் அரசு கவனம் செலுத்தி வருகிறது' என, அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:குறுவை விவசாயத்திற்காக, ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கடைமடை பகுதியான காரைக்கால் விவசாயிகள் பெறுவர். இதற்காக புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில், தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஜூலை மாதம் குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில், காரைக்காலில் தண்ணீர் வருவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமல், ஒட்டுமொத்த நிர்வாகமும் மதுக்கடை சம்பந்தமாக கவனம் செலுத்தி வருகிறது.காவிரி நீர் வரும் அரசலாறு வாய்க்கால், நுாலாறு, அம்பகரத்துார் வாய்க்கால், நல்லம்பல் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் முழுமையாக துார் வாரப்படவில்லை. சில வாய்க்கால்கள் துார் வாரப்பட்டாலும், போதுமானதாக இல்லை. போர்க்கால அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய், கால்வாய்களை துார்வார வேண்டும்.சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சரை தவிர மற்ற அனைவரும், அரசு ஊழியர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய ஆலோசித்துள்ளனர். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றிய 150 பேருக்கு பல ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல், பணி நீக்கம் செய்துள்ளது, விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X