இந்தியா

சண்டே மார்க்கெட்டை திறக்க முதல்வரிடம் ஏ.ஐ.டி.யூ.சி., மனு

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சண்டே மார்க்கெட்டை திறக்க கோரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.சட்டசபையில் முதல்வர் நாராயணசாமியிடம், ஏ.ஐ.டியூ.சி., மூத்த தலைவர் அபிஷேகம், பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் சங்க செயலாளர் துரைசெல்வம், தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு காரணமாக, புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் மூடப்பட்டது. சண்டே மார்க்கெட் கடைகள் இதுவரை திறக்கப்படாததால், இங்கு வியாபாரம் செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர். மேலும், ஏழை எளிய மக்கள் சண்டே மார்க்கெட்டில் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி பயன்பெற்று வந்தனர்.எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, சண்டே மார்க்கெட் கடைகளை திறந்து, கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளியை பின்பற்றி, மாஸ்க் அணிந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X