இ-ஆபிஸ் முறைக்கு மாறும் அரசு துறைகள்| Dinamalar

இந்தியா

இ-ஆபிஸ் முறைக்கு மாறும் அரசு துறைகள்

Added : மே 21, 2020
Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகள், இ-ஆபிஸ் முறைக்கு மாற உள்ளன. தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் இ-ஆபிஸ் மின் அலுவலக முறை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவலியல் மையம்,மூலம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதில், அனைத்து அலுவலக நடவடிக்கைகளை காகித முறை இல்லாமல் மின்னணு முறையில் செயல்படுத்த முடியும். அனைத்து மாநிலங்களிலும் அரசு துறைகள் இ-ஆபிஸ் முறைக்கு மாறி வருகின்றன. புதுச்சேரி வருவாய் பேரிடர் மேலாண் துறை தற்போது இ ஆபீஸ் முறைக்கு மாறியுள்ளது. இதனை அமைச்சர் ஷாஜகான் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இ-ஆபிஸ் அமைப்பு, அரசு செயல்முறைகளை எளிமையாக்குகிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் கோப்புகளைக் கண்காணிக்க முடியும். அனைத்து நேரங்களிலும் விவரங்கள் அறிந்து கொள்ள முடியும். புதுச்சேரி ஐ.டி.,துறை, யூனியன் பிரதேசத்தில் இ-ஆபிஸ் முறையை செயல்படுத்துவதற்கான பொறுப்பு துறையாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X