இந்தியா

பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கம் துவக்கம்

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று 5 வழித்தடங்களில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயங்கின.கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் புதுச்சேரியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 4வது ஊரடங்கில், மத்திய அரசு வழங்கிய தளர்வுகளை பயன்படுத்தி, புதுச்சேரியில் டவுன் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. பஸ்களில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி நேற்று, பி.ஆர்.டி.சி., சார்பில் முதல்கட்டமாக 5 வழித்தடங்களில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிந்தனர். ஒவ்வொரு பஸ்சிலும் 10க்கும் குறைவான மக்களே பயணித்தனர். பழைய கட்டணமே வசூலிக்கப்பபட்டது.பஸ் நிலையத்தில் தற்போது காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால், ஆட்டோக்கள் நிறுத்தும் ஷெட்டில் மக்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில், இருக்கைகள் அமைப்பது தொடர்பாக, தாசில்தார் ராஜேஷ்கண்ணா, எஸ்.பி., மாறன், நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனினும், நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, கடந்த பல நாட்களாக சுகாதார ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை ஏற்றிச் செல்லுதல், அரிசி ஏற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ்களை இயக்கினர். காரைக்காலிலும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X