இந்தியா

செட்டிப்பட்டில் கிராம சபா கூட்டம்

Added : மே 21, 2020
Share
Advertisement

திருக்கனுார்: செட்டிப்பட்டு கிராமத்தில் புதிதாக போர்வெல் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் திரவுபதியம்மன் கோவில் திடலில் நேற்று நடந்தது.திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்த நான்கு போர்வெல்களில், இரண்டில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாமல் பழுதாகின. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் பாதித்தனர். கிராமத்தில் புதிதாக இரண்டு போர்வெல்கள் அமைக்க இடம் தேர்வு செய்ய சிறப்பு கிராம சபா கூட்டம் திரவபதியம்மன் கோவில் திடலில் நேற்று நடந்ததுகூட்டத்திற்கு, செல்வம் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் சாந்தன், உதவி மேலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், செட்டிப்பட்டு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை போக்க, ரீ.சர்வே எண் 98 ல் அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்து புதிதாக ஒரு போர்வெல் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.முதல் போர்வெல் அமைக்கும் பணி முடிந்தவுடன், பொதுமக்களிடம் மீண்டும் கருத்து கேட்டு, இரண்டாவது போர்வெல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X