இந்தியா

மத்திய அரசு செவிசாய்க்கவில்லை முதல்வர் நாராயணசாமி வருத்தம்

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'கொரோனாவால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது' என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.அவர் நேற்று அளித்த பேட்டி:கடந்த மார்ச் 23ம் தேதி முதல் தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டதால், புதுச்சேரி அரசுக்கு வருவாய் இல்லை. இப்போது ஊரடங்கை தளர்த்தி இருந்தாலும் சஜக வாழ்க்கை திரும்பவில்லை. ஆகவே, மாநில அரசுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீடும், பாதிக்கப்பட்டதற்கு நிதி ஆதாரம் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் வரவில்லை.கொரோனா தடுப்புக்கான கட்டமைப்பினை உருவாக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். குறிப்பாக, இடைக்காலமாக 200 கோடி ரூபாய், என மொத்தம் 995 கோடி ரூபாய் கேட்டு கடிதம் எழுதினேன். அதற்கும் மத்திய அரசு பதில் தரவில்லை.அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. மத்திய அரசு உடனடியாக மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும். மத்திய அரசு உதவினால் ஒழிய, மாநில அரசுகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X