இந்தியா

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள550 குடும்பங்களுக்கு நிவாரணம்

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி கிளப் மகேந்திரா ஹாலிடேஸ் அன்ட் ரிசார்ட் நிறுவனம் சார்பில், ஊரடங்கால் பாதித்த 550 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதுச்சேரி கிளப் மகேந்திரா ஹாலிடேஸ் அன்ட் ரிசார்ட் நிறுவனம் சார்பில், கிருமாம்பாக்கம் அடுத்த வள்ளுவர்மேடு, நரம்பை கிராமத்தில் வீடு வீடாக சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை, ரிசார்ட் மேலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கொள்முதல் பிரிவு மேலாளர் மஞ்சுநாத், அலுவலக மேலாளர் மனுகுமார், நிர்வாக மேலாளர் ரமணி, துணை தாசில்தார் செந்தில், மகேந்திரா நிறுவன ஊழியர்கள், மளிகைப் பொருட்கள், முககவசம் உள்ளிட்ட தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 550 குடும்பங்களுக்கு வழங்கினர்.முள்ளோடையில் உள்ள புதுவை சன் டிரஸ்ட், சின்ன கங்கணாங்குப்பம் லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், கிருமிநாசினி மற்றும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X