புதுடில்லி: 'கொரோனா'வின் தாக்கத்தால் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனாலும், புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள, அனைவரும் திணறி வருகின்றனர்.

கொரோனா வைரஸ், கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக, உலக நாடுகளை தாக்கி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 50 லட்சத்து, 10 ஆயிரத்து, 113ஆக உயர்ந்துள்ளது. இதில், 19 லட்சத்து, 75 ஆயிரத்து, 978 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், மூன்று லட்சத்து, 25 ஆயிரத்து, 332 பேர் பலியாகி உள்ளனர்.வைரஸ் பாதிப்பால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.
தற்போது இந்த கட்டுப்பாடுகள், பல்வேறு நாடுகளில் தளர்த்தப்பட்டுள்ளன. இழந்த பொருளாதாரத்தை மீட்க, மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனாலும், பள்ளி, அலுவலகம், பொது போக்குவரத்து, உணவகங்கள் என, பல இடங்களில், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இந்த புதிய இயல்பு வாழ்க்கை, மக்களுக்கு சுலபமாக இல்லை. இந்தக் கட்டுப்பாடுகளால், தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 'ஓட்டல், பார்களில், இனி கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட முடியாது. இதனால், ஓட்டல் உட்பட அனைத்து தொழில்களுக்கும் வருவாய் பாதிப்பு நிச்சயம் இருக்கும்' என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE