இந்தியா

புதுச்சேரியில் உயர்கிறது மது விலை

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் இன்றும் மதுக்கடைகள் திறக்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரியில் ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க, கடந்த 18ம் தேதி அமைச்சவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி மறுத்த கவர்னர், மதுவுக்கு கொரோனா வரி விதிக்குமாறு அறிவுறுத்தினார்.இரண்டாவது முறையாக அமைச்சரவை கூடி, புதுச்சேரிக்கு 25 சதவீதம், மாகி-30 ; ஏனாம்-35 என்ற சதவீதத்தில் மதுக்கு கொரோனா வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.இதுகுறித்து நேற்றுமுன்தினம் இரவு அனுப்பப்பட்ட கோப்பினை, கவர்னர் நேற்று பரிசீலனை செய்தார். அமைச்சர் நமச்சிவாயம், ராஜ்நிவாசில் கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது, மதுக்கடைகளை திறப்பது குறித்து விவாதித்தனர்.அதை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மதுக்கடைகளை திறந்தால், அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் மது அருந்த வருவர். இதனால் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரியில் மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்க வேண்டும்.அப்போதுதான் அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு மது அருந்த வர மாட்டார்கள் என்ற கவர்னரின் கருத்து குறித்து, விவாதிக்கப் பட்டது.மேலும், அண்டை மாநிலங்களை போல புதுச்சேரியில் மதுபானங்களுக்கு வரியை உயர்த்தினால், உள்ளூர் நுகர்வோர் பாதிக்கப்படுவர்; மது விற்பனையிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் கவர்னரின் ஆலோசனைப்படி, கொரோனா வரி சதவீதத்தில் சற்று மாற்றம் செய்வது என்றும், கூடுதலாக வரி விதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.இரவு 8.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முடிந்தது. அதன் பிறகு அமைச்சரவை முடிவுகளை கோப்பு தயாரித்து, கவர்னருக்கு அனுப்ப போதிய அவகாசம் இல்லை. எனவே, இன்றும் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு இல்லை.இன்றைக்கு கோப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்தால், நாளை 22ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X