இந்தியா

முக கவசம் அணியாதவர்களை போலீஸ் கண்காணிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி;'பொது இடங்களுக்கு முக கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்' என, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் கடந்த 57 நாட்களாக எல்லைகளை மூடி, கண்காணித்ததாலும், சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த பணியாலும், பக்கத்து மாவட்டங்களில் தொற்று அதிகரித்தாலும், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்பாட்டில் இருந்தது. பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் சிக்கி உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் திரும்பும்போது, புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என கூறியிருந்தேன். அதன்படி, புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்தபிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து திரும்புவோரை தனிமைப்படுத்த ஏதுவாக, 526 படுக்கைகளுடன், 6 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.தொற்று இல்லாதபட்சத்தில் வீட்டில் தனியான அறை, தனியான கழிவறை வசதி இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர்.ஊரடங்கு விதிகளை தளர்த்திய பின், கடந்த 3 நாட்களாக பொது இடங்களில் முக கவசம் அணியாமல் நிறைய பேர் வருவதை பார்க்க முடிக்கிறது. முக கவசம் அணிவது கட்டாயம் என மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கி உள்ளது. முக கவசம் கட்டாயம் என, மாநில அரசும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் போலீசார் எந்த சமரசமும் இல்லாமல் பார்க்க வேண்டும். பொதுமக்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார், இந்தியமுறை மருத்துவ இயக்குனரகத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு, நோடல் அதிகாரி ரமேஷ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X