இந்தியா

ஊரடங்கு கால தாமதத்திற்கு அபராதம் இல்லை வருங்கால வைப்பு நிதி ஆணையர் அறிவிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: ஊரடங்கு காலத்தில் தாமதங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படாது என புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.வருங்கால வைப்பு நிதி புதுச்சேரி மண்டல அலுவலக ஆணையர் வம்சி கிருஷ்ணா டிண்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா ஊரடங்கின் காரணமாக, வருங்கால வைப்புநிதி சட்டம் 1952ன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியதோடு, வழக்கமான முறைப்படி செயல்பட முடியாமலும், உரிய நேரத்தில் தங்களது வருங்கால வைப்புநிதி பங்களிப்பை செலுத்த முடியாமலும் உள்ளன.ஊரடங்கு காலத்தில், நடைமுறை மற்றும் பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு, காலதாமதமாக செலுத்தும் கட்டணங்களுக்கு அபராதங்கள் வசூலிக்கப்பட மாட்டாது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முடிவு செய்துள்ளது.எனவே, ஊரடங்கு காலத்தில் இது போன்ற தாமதங்களுக்கு அபராதங்கள் எதுவும் விதிக்கக் கூடாது. எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் அனைத்து கள அலுவலகங்களுக்கும் கடந்த 15 ம்தேதி சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கையை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் இணைய தளத்தின் முகப்புப்பக்கத்தில் கோவிட்-19 என்ற தலைப்பில் காணலாம்.வருங்கால வைப்புநிதி சட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6.5 லட்சம் நிறுவனங்களை ஊரடங்கு காலத்தில் அபராத தொகை செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து விடுவிக்கும். மேலும் வருங்கால வைப்புநிதி சட்ட நியமங்களின்படி இணக்கமாக நடந்து கொள்வதை எளிதாக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X