இந்தியா

குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி; இரு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பேட் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமுதன், 33; ரவுடி. அமைச்சர் கந்தசாமியின் உதவியாளரான, பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீரப்பன், அவரது மைத்துனர் சாம்பசிவம் ஆகியோரை கொலை செய்த வழக்கில், அமுதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தற்போது, அமுதன் ஜாமின் பெற முயற்சி செய்துவருகிறார்.ஜாமினில் வந்தால், அவரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அமுதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, தெற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், பரிந்துரை செய்தார். அதை ஏற்று, அமுதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.இதனையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார், காலாப்பட்டு சிறையில் உள்ள அமுதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையின் நகலை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X