இந்தியா

சூதாடிய 11 பேர் மீது வழக்கு பதிவு

Added : மே 21, 2020
Share
Advertisement

வில்லியனுார்:வில்லியனுார் அருகே இரு இடங்களில் சூதாடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.வில்லியனுார் அடுத்த மேல்திருக்காஞ்சியில் ஒரு வீட்டு மாடியில் ஒரு கும்பல் சூதாடுவதாக, மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யாவிற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், சமூக இடைவெளியின்றி அமர்ந்து சூதாடிய முருகன், சுரேஷ், கார்த்திகேயன், ரவி, தமிழ்ச்செல்வன், சிவா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.வில்லியனுார் அருகே சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது, கூடப்பாக்கம் பேட்டில் பணம் வைத்து சூதாடிய எட்டியான், அபிமன்னன், ஏழுமலை, குமார், விஜய் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து ரூ. 160 மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X