இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் அரசு ஊழியர் சம்மேளனம் ஆதரவு

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி;மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து சம்மேளன பொதுச் செயலாளர் ராதாக்கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை;மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை (22ம் தேதி) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும், நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.இவ்விரு போராட்டங்களிலும் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் பங்கேற்கும். சம்மேளன இணைப்பு சங்கங்கள், தங்கள் அலுவலகம் எதிரில் சமூக இடைவெளியை கடைபிடித்து, நாளை மாலை 5.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X