பொறியியல் பிரிவுக்கு தனி கட்டட பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் பிரிவுக்கு தனி கட்டட பணி

Added : மே 21, 2020
Share

திருத்தணி : நகராட்சியில், பொறியியல் பிரிவுக்கு, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், பொறியியல் பிரிவு மிகவும் குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.மேலும், பொறியியல் பிரிவு உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்து பாதுகாக்கவும் இட வசதியில்லாமல் அதிகாரிகள் திணறி வந்தனர்.

இதையடுத்து, நகராட்சி பொதுநிதியில் இருந்து, பொறியியல் பிரிவுக்கு என, ஒன்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.இந்நிலையில், நேற்று, நகராட்சி அலுவலகத்தின் பின்பிறத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, அங்கு பொறியியல் பிரிவு கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இப்பணிகள், மூன்று மாதத்திற்குள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி பொறியாளர் சரவணன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X