சென்னை: 'ஹூண்டாய்' நிறுவனம், 'ஸ்பிரிடட் நியூ வெர்னா' எனும், புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், எஸ்.எஸ்.கிம் கூறியதாவது:நாட்டிலேயே முதன் முறையாக, அனைத்து தொழில்நுட்பங்களையும் இணைக்கும் வகையில், இந்த நடுத்தர, 'செடான்' வகை வெர்னா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில், நவீன தொழில்நுட்பம் மற்றும் கண்கவர் வடிவமைப்புடன், இளம் தலைமுறையினரை கவரும் அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக, வாகன உறவு மேலாண்மை, புவியியல் தகவல் சேவைகள், அவசர கால எச்சரிக்கை சேவைகள், பாதுகாப்பு என, 45 விதமான, முக்கிய அம்சங்கள் உள்ளதால், வாடிக்கையாளர்கள், அதிகபட்ச நம்பகத்தன்மையுடன் இதை வாங்கலாம்.இந்த அம்சங்கள், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அதன்பின், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப, புதுப்பித்துக் கொள்ளலாம்.புதிய தலைமுறையினரை கவரும் வகையில், ஏழு கியர்களுடன் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஐந்து அல்லது ஆறு கியர்கள் மட்டுமே, கார்களில் இருக்கும்.இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், 5.28 லட்சம் வாடிக்கையாளர்கள், இந்த காரை வாங்கி உள்ளனர். இந்த கார், 'எக்ஸ்- ஷோரூம்' விலையில், 9.30 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE