பிறப்பு பதிவேற்றம் மீண்டும் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிறப்பு பதிவேற்றம் மீண்டும் துவக்கம்

Added : மே 21, 2020
Share

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தப்பட்ட, பிறப்பு, இறப்பு பதிவேற்றம், மீண்டும் துவங்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியில், பிறப்பு மற்றும் இறப்பு விபரங்கள், மருத்துவமனை சான்று அடிப்படையில், மாநகராட்சி இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த பணியை, சுகாதாரத்துறை செய்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால், பிறப்பு, இறப்பு பதிவேற்றம் பணி நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக, தற்போது, அலுவலகம் செயல்பட துவங்கியது.

இதையடுத்து, மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு விபரங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியது. தேவைப்படுவோர், மாநகராட்சி இணையதளம் வழியாக, சான்றிதழாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பெயர் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பாக, அவசர சான்று தேவைப்படுவோர் மட்டும், அந்தந்த மண்டல அலுவலகத்தை நாட வேண்டும்.இதர மக்கள், கொரோனா முடிவுக்கு வந்ததும், அலுவலகத்தை நாட வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X