பொது செய்தி

தமிழ்நாடு

அனல் காற்றால் மக்கள் அவதி

Added : மே 21, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : புயல் சின்னம் காரணமாக, திருவொற்றியூர், எண்ணுார் உள்ளிட்ட, வட சென்னை பகுதிகளில், பலத்த அனல் காற்று வீசியது.

தமிழகத்தில், மே மாதம் துவக்கத்தில் இருந்தே, வெயில் வெளுத்து வாங்குகிறது. வங்க கடலில் உருவாகி, வங்க தேசம் நோக்கி நகரும், 'அம்பான்' புயலால், காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, சென்னையின் பல இடங்களில், வெயில் வாட்டி வதைக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஇருந்தது.அதன்படி, நேற்று முன்தினம், சென்னையில் பல இடங்களில், வெயில் கொளுத்தியது.

நேற்று காலை, எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பிராட்வே போன்ற சுற்று வட்டார பகுதிகளில், வெயிலுடன் பலத்த அனல் காற்று வீசியது.கடற்கரைகளில், உப்பு காற்றுடன் சேர்ந்த அனலால், காதுகளில் அடைப்பு ஏற்படும் அளவிற்கு, நிலைமை மோசமாக உணரப்பட்டது.

அனல் காற்று காரணமாக, எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் விரைவு சாலைகளில், வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X