சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Added : மே 21, 2020
Share
Advertisement

கொடுங்கையூர் : ரேஷன் அரிசி, 2 டன் கடத்தியவரை, போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர் போலீசார், நேற்று அதிகாலை, மீனம்பாள் சாலை - தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி இருந்தது.

வாகன ஓட்டுனரான, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன், 39, என்பவரிடம் விசாரித்தனர். அதில், அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.மோகனை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து, குடியுரிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X