சென்னை : தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற, காங்., - எம்.பி., ஜோதிமணியை, தரக்குறைவாக பேசிய, பா.ஜ., பிரமுகர் கரு.நாகராஜனுக்கு, கன்னியாகுமரி தொகுதி, காங்., - எம்.பி., வசந்தகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:காங்., - எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., - எம்.பி., ஒருவர் மற்றும், பா.ஜ.,வைச் சேர்ந்த கரு.நாகராஜன் ஆகியோர், கடந்த, 18ல், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர். இதில், கரு.நாகராஜன், எங்கள் கட்சி, எம்.பி., ஜோதிமணியை, ஒரு பெண் என்று கூட பார்க்காமல், தரக்குறைவாக பேசினார்.
இது, பா.ஜ., உறுப்பினர்களுக்கு புதிதல்ல. கரு.நாகராஜன் போன்றவர்களை, தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தொலைக்காட்சியும், நேர்முக பேட்டி மற்றும் விவாதத்திற்கு பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. அவரை தடை செய்ய வேண்டும் என, அனைத்து தொலைக்காட்சி உரிமையாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE