தமிழ்நாடு

கோயம்பேடு, கொத்தவால்சாவடி மூடல்; உணவு தானியங்கள் விலை உயரும் அபாயம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 கோயம்பேடு, கொத்தவால்சாவடி மூடல்; உணவு தானியங்கள் விலை உயரும் அபாயம்

சென்னை : கோயம்பேடு மற்றும் கொத்தவால் சாவடி மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருப்பதால், உணவு தானியங்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கொத்தவால் சாவடியில் பழமை வாய்ந்த உணவு தானிய மார்க்கெட் இயங்கி வந்தது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கடைகளில், மொத்த விற்பனை நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் இங்கிருந்து விற்பனை செய்யப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இந்த மார்க்கெட் மூடப்பட்டு உள்ளது. சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காததால் கோயம்பேடில் இயங்கி வந்த உணவு தானிய மார்க்கெட் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. இங்கு, 499 கடைகள் இயங்கி வந்தன.இந்த இரண்டு முக்கிய மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், அரிசி, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், இரண்டு நாட்களில் உணவு தானியங்கள் மற்றும் மசாலா பொருட்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது.எனவே, உணவு தானியங்கள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, உரிய நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X