சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்க மாட்றாங்கய்யா! ரூ.7,500 லஞ்சம்: வங்கி மேலாளர் கைது

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : வாடிக்கையாளரிடம் இருந்து, 7,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வங்கி முதுநிலை மேலாளரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர், ரவீந்திரன் சாமுவேல், 59. இவர், கீழ்ப்பாக்கம், கெல்லீசில் உள்ள, இந்தியன் வங்கியில், முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்தார்.இந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர், கடன் பெற்று, அதை முழுவதுமாக செலுத்திவிட்டார். அவர், கடன் பெற்ற போது வழங்கிய உத்தரவாத பத்திரங்களை திரும்ப தருமாறு, ரவீந்திரன் சாமுவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.

அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என, அந்த வாடிக்கையாளர் கூறியுள்ளார். இதனால், 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என, கேட்டுள்ளார். கடைசியாக, 7,500 ரூபாயாவது தருமாறு, ரவீந்திரன் சாமுவேல் கூறியுள்ளார்.

இதுகுறித்து, சில தினங்களுக்கு முன், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், அந்த வாடிக்கையாளர் புகார் அளித்தார். சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ரவீந்திரன் சாமுவேலின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். அவர், நேற்று முன்தினம், வாடிக்கையாளரிடம் இருந்து, ரசாயன பொடி தடவிய, லஞ்சப்பணம், 7,500 ரூபாயை வாங்கியபோது, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.நேற்று அவரை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X