சென்னை : லலிதா ஜுவல்லரி சார்பில், கொரோனா நிவாரண நிதியாக, 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
லலிதா ஜுவல்லரி தலைவர் எம்.கிரண்குமார், கொரோனா நிவாரண நிதியாக, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக தலைமை செயலர் சண்முகத்திடம் வழங்கினார்.இது குறித்து, எம்.கிரண்குமார் கூறியதாவது:தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு, தலா, 1 கோடி ரூபாய் வழங்கி உள்ளேன். மக்கள், அரசு ஆதரவில் தான், இவ்வளவு துாரம் வளர்ந்துள்ளோம். கொரோனா நிவாரண நிதி வழங்கியதை, என் கடமையாக நினைக்கிறேன்.
கொரோனா தடுப்புக்கு, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. ஊரடங்கு முடிந்ததும், எங்கள் கடைகள் திறக்கும். வாடிக்கையாளர்கள் நலன் கருதி, பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.ஊழியர்கள் துாய்மையை பாதுகாக்க, சிறப்பு பயிற்சி அளித்துள்ளோம். மொத்த வளாகமும், அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்.தங்கத்தின் விலை உயர்வு, நம்பகத்தன்மை வாய்ந்த முதலீடு என்பதை, மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. பொருளாதார பாதுகாப்புக்கு, தங்கம் என்றும் ஒரு இணையில்லா குறியீடு.இவ்வாறு, அவர் கூறினார்.