பொது செய்தி

தமிழ்நாடு

சீறிய அலைகளால் போக்குவரத்து பாதிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

எண்ணுார் : வங்க கடலில் உருவான, 'அம்பான்' புயல் காரணமாக, எண்ணுார், திருவொற்றியூர், காசிமேடு கடல் பகுதிகளில், கடல் அலை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. பலத்த சத்தத்துடன், தடுப்பு கற்களை தாண்டி, சாலையில் வீசியடிக்கப்பட்ட கடல் தண்ணீரால், சாலையில், சிறு பாறைகளும், மணலும் குவிந்தன.

பாரதியார் நகர், நேதாஜி நகர், தாழங்குப்பம் போன்ற பகுதிகளில், தார் சாலை முழுவதும் கடல் மணல் மூடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும், பாரதியார் நகரில் உள்ள, அம்மா உணவகத்தை கடல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.ஆக்ரோஷ அலைகளுடன் மல்லுக்கட்டும் மீனவர்கள், தங்கள் படகுகள், வலைகளை பாதுகாக்க போராடி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, புயல், கடல் சீற்றத்தின் போது பாதிக்கப்படும், மீனவ கிராம மக்களுக்கு உதவ வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X