சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று கணக்கெடுப்பு நாடகமாடி கொள்ளை அடித்து சென்ற கும்பல்

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வியாசர்பாடி : கொரோனா கணக்கெடுப்பு என நாடகமாடி, பெண்களிடம் நகை, பணம், மொபைல் போன்களை பறித்து சென்ற, மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

எம்.கே.பி., நகர், 17வது மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வி, 49. நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டின் கதவை, இருவர் தட்டியுள்ளனர். விசாரித்த போது, கொரோனா கணக்கெடுப்பிற்கு வந்திருக்கும் அதிகாரிகள் என கூறியுள்ளனர்.வீட்டிற்குள் சென்றவர்கள், செல்வியிடம் கத்தியை காட்டி மிரட்டி, நகை, பணம் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர். சுதாரித்தவர், வெளியே ஓட முயற்சித்தார். வாசலில் நின்றிருந்த கொள்ளையர்களின் கூட்டாளி இருவர், அவரை மடக்கி பிடித்து, வீட்டிற்குள் தள்ளினர்.

வீட்டில் இருந்த செல்வியின் மகள் பிரதீஷா, 30, என்பவரது, 4 சவரன் தாலி சங்கிலி, நான்கு மோதிரங்கள், ஐந்து மொபைல்கள், 8,000 ரூபாய் ஆகியவற்றை, பறித்து தப்பினர்.அவர்கள் கூச்சலிடவே, பக்கத்து வீட்டுக்காரரான, வனரோஜா, 41, என்பவர், செல்வி வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவரிடமும் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளை கும்பல், அவர் விரலில் அணிந்திருந்த மோதிரங்களை பறித்து, பின்பக்க மதில் ஏறி தப்பினர்.இது குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-202007:10:51 IST Report Abuse
ஆப்பு சுயவேலை வாய்ப்பு திட்டம் அதிகரிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X