பொது செய்தி

இந்தியா

கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு அதிகம்: அமைச்சர் தோமர்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு, அதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிவு, கிராமப்புற மக்களிடம் அதிகம் உள்ளது,'' என, அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார்.இது குறித்து, மத்திய பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மேலும் கூறியதாவது: நகரங்களில் இருந்து, ஏராளமான புலம்பெயர்
Narendra Singh Tomar, covid 19, coronavirus, BJP,  கிராமம், கொரோனா

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு, அதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிவு, கிராமப்புற மக்களிடம் அதிகம் உள்ளது,'' என, அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார்.

இது குறித்து, மத்திய பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மேலும் கூறியதாவது: நகரங்களில் இருந்து, ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள், கிராமங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் குறித்து, கிராமப்புற மக்கள், அதிக விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும், நன்கு அறிந்து வைத்துள்ளனர். கிராமங்களுக்கு வந்து சேருவோர் அனைவரையும், முழுவதுமாக பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.


latest tamil news


இந்த கூடுதல் பணிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நிச்சயம் பெரும் சுமை தான். இதற்கு தீர்வு காண, 15 வது நிதிக்குழு மூலம், கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு, நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களுக்கு திரும்புவோரிடம் சொந்த வீடில்லை எனில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம், அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும். ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழும், அவர்களுக்கு வேலை வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் AAMAANGA VAITHTHIYATHUKKU VAZHIYILLAIYE JAAKRATHAYAATHTHAAN IRUNTHUKKANUM ILLENNAA SSAGA THAYAARAA IRUKKANUM
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X