தென்னாப்பிரிக்காவில் தவித்த இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்புகின்றனர்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
Scientists, Indians, Return Home, South Africa, indian scientist, johannesburg, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown,

ஜோஹனஸ்பர்க்: கடந்த 3 மாதங்களாக தென்னாப்பிரிக்காவில் சிக்கி தவித்து வரும் இந்திய விஞ்ஞானிகள், சிறப்பு விமானம் மூலம், நாளை(மே 22) தாயகம் திரும்ப உள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த, 26 விஞ்ஞானிகள், அன்டார்டிகாவில் ஆராய்ச்சி பணி மேற்கொள்ள சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து, அவர்கள், நாடு திரும்ப முடியாமல், தென்னாப்ரிக்காவில், கடந்த மூன்று மாதங்களாக சிக்கியுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், ஜோஹனஸ்பர்க்கில் இருந்து, நாளை புறப்பட்டு, மும்பை வழியாக, டில்லி வரை வரும், 'சவுத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், 26 விஞ்ஞானிகள் உட்பட, 150 இந்தியர்கள், நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X