பெர்மிட் இல்லாத பஸ்கள்; காங்., தலைமையை சாடும் காங்., எம்.எல்.ஏ.,

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
Cruel joke, buses, migrants, Congress MLA, Aditi Singh, Priyanka Gandhi, bus row, up, uttar pradesh, காங்கிரஸ், அதிதி சிங்

லக்னோ: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெர்மிட் இல்லாத பஸ்களையும், சிறிய வாகனங்களையும் அனுப்பி, காங்., தலைமை 'கொடூரமான நகைச்சுவை' செய்துள்ளது என அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வே கட்சி தலைமையை வறுத்தெடுத்துள்ளார்.

டில்லி - உ.பி., எல்லையில் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, 1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளதாக காங்., கட்சி அறிவித்திருந்தது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காங்., பொதுச் செயலர் பிரியங்கா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.


latest tamil news


இந்நிலையில், பஸ்கள் விவகாரத்தில், காங்., தலைமையை அந்த கட்சியின் ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ., அதிதி சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்., அனுப்பிய பஸ்களில் பெரும்பாலானவை சிறிய வாகனங்கள். அனுப்பப்பட்ட ஆயிரம் பஸ்களின் பட்டியலில், பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை. 297 குப்பை பஸ்கள், 98 ஆட்டோ ரிக் ஷாக்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், 68 வாகனங்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லை.

இது ஒரு கொடூரமான நகைச்சுவை. ஒரு பேரழிவின் போது, இதுபோன்ற சிறுபிள்ளைதனமான அரசியல் தேவை தானா? பஸ்கள் இருந்தால், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிராவுக்கு ஏன் அனுப்பவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.


latest tamil news


மேலும் அவர், 'ராஜஸ்தானின் கோட்டா நகரில், ஆயிரக்கணக்கான உ.பி., மாணவர்கள் சிக்கி தவித்த போது, அங்கு ஏன் பஸ்களை அனுப்பவில்லை. காங்., அரசால், அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எல்லையில் கூட அவர்களால் விட முடியவில்லை. யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால் அவர்கள் உ.பி., அழைத்து வரப்பட்டனர். இதனை ராஜஸ்தான் முதல்வரும் பாராட்டினார்' என்றார்.

தன் சொந்த கட்சி எம்.எல்.ஏ.,வே விமர்சித்ததால், காங்., தலைமை இதனை எதிர்கொள்ள முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
26-மே-202017:10:08 IST Report Abuse
Tamilnesan இந்த செய்தியை படித்து விட்டு இன்னும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்களா? இந்த ஏமாற்று பிழைப்புக்கு.....
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
25-மே-202021:52:51 IST Report Abuse
S.Ganesan அடுத்த ஆள் பாஜகவில் சேர தயார். இப்படியே போனால் காங்கிரஸில் உள்ள பழைய பெருச்சாளிகளை தவிர இளைஞர்கள் யாரும் சப்போர்ட் பண்ண மாட்டார்கள் போலிருக்கிறதே
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
25-மே-202007:18:09 IST Report Abuse
Srinivasan Rangarajan இந்த அம்மாவ ராகுலுக்கு கல்யாணம் பண்ணிடலாம் னு பார்த்தாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னால .ராகுல் எனக்கு அண்ணன் போல என்று மறுத்து விட்டார் அதிதி சிங். இப்போது கட்சி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய பட்டு உள்ளார். Advantage BJP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X