ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்: தமிழக அரசு| One lakh migrant workers sent back: TN govt | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்: தமிழக அரசு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (6)
Share
Tamil nadu, Migrants, tamil nadu news, coronavirus lockdown, tn news, coronavirus india

சென்னை: இதுவரை ஒரு லட்சத்து 799 புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக அரசு சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமலான ஊரடங்கால், வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிலர், நடைப்பயணமாக சொந்த ஊர் செல்கின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், இது தொடர்பாக கொளத்தூரை சேர்ந்த திலக்ராஜ் என்பவர், பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பதிலளித்தனர்.


latest tamil news


அவர்கள் வாதுரையில், புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு மற்ற மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற 2.43 லட்சம் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களில் இதுவரை ஒரு லட்சத்து 799 பேர் தமிழக அரசின் செலவில், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், என வாதிட்டனர்.


latest tamil news


இதனையடுத்து, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடங்களின் விவரங்களை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் சமூக இணையதளங்களின் வாயிலாக அறிவிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்குபுரியும் மொழிகளில் அறிவிப்பு வெளியிடவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X