பொது செய்தி

தமிழ்நாடு

நடந்தே வந்த வடமாநில தொழிலாளர்கள்; அதிகாரிகள் குழு உணவு வழங்கி உதவி

Added : மே 21, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடந்து வந்த, 27 தொழிலாளருக்கு, அதிகாரிகள் குழுவினர் உணவு வழங்கி உதவினர்.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூர் சோதனைச்சாவடியில், 'கொரோனா' தடுப்பு பணியில், சுகாதாரம், வருவாய், போலீசார், 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து, சேலத்துக்குள் நுழையும் வாகனங்களை நிறுத்தி, பரிசோதனைக்கு பின் அனுமதிக்கின்றனர். இந்நிலையில், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பணிபுரிந்த, வடமாநில தொழிலாளர், 27 பேர், சொந்த ஊர் செல்ல, நடந்தே மல்லூருக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய சுகாதார அதிகாரிகள், உணவு, தண்ணீர் வழங்கினர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்களை, பணிபுரிந்த நிறுவன உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, உரிய உதவி செய்ய, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

3 நாள் நடந்து: அதேபோல், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் கூலி வேலை செய்த, உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மூவர், சொந்த ஊர் செல்ல, மூன்று நாள் நடந்தே, மல்லூர் வந்தனர். அவர்களையும், அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சாப்பாடு, தண்ணீர் கொடுத்து, தங்க வைத்தனர். சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, சோதனை செய்ததில், தொற்று இல்லை என, தெரிந்தது. இதையடுத்து, சேலத்திலிருந்து உ.பி., செல்லும் ரயிலில், மூவரையும் அனுப்பி வைக்க, அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X