சலூனுக்கு சீல்: 4 கடைகளுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சலூனுக்கு சீல்: 4 கடைகளுக்கு அபராதம்

Added : மே 21, 2020
Share
சேலம்: சலூன் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மேலும் நான்கு கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ஊரடங்கால், நகர் பகுதிகளில், சலூன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், பல கடைகள் செயல்படுகின்றன. அதனால், முதல் முறை அபராதம், மீண்டும் திறந்தால் சீல் வைப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று, சேலம், பெரமனூர் பிரதான சாலையிலுள்ள, ஒரு சலூன் கடையை

சேலம்: சலூன் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மேலும் நான்கு கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ஊரடங்கால், நகர் பகுதிகளில், சலூன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், பல கடைகள் செயல்படுகின்றன. அதனால், முதல் முறை அபராதம், மீண்டும் திறந்தால் சீல் வைப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று, சேலம், பெரமனூர் பிரதான சாலையிலுள்ள, ஒரு சலூன் கடையை மூடி, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். அதே பகுதியில் செயல்பட்ட, இரு சலூன் கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும், சூரமங்கலத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாத, இரு காய்கறி கடைகளுக்கும், அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X