பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளை விலைக்கு வாங்கி திருப்பூரிலிருந்து உ.பி.,க்கு பயணம்

Added : மே 21, 2020
Share
Advertisement

ஆத்தூர்: திருப்பூரில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஐந்து பேர், சைக்கிளை விலைக்கு வாங்கி, 2,250 கி.மீ., தூரமுள்ள உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்கபூர், 35, சந்தீப், 38, வினோத்குமார், 27, பிரமேஸ், 30, சுனில்குமார், 32. இவர்கள், திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில், ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்து வந்தனர். தற்போது ஊரடங்கால் வேலையிழந்தனர். இவர்கள், அரசின் அனுமதி பெற்று சொந்த ஊர் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டதால், திருப்பூரில், தலா, 2,500 ரூபாய்க்கு, சைக்கிள்களை விலைக்கு வாங்கினர். தொடர்ந்து, அங்கிருந்து ஈரோடு, சேலம், சென்னை வழியாக, 2,250 கி.மீ., தூரமுள்ள உத்தரப்பிரதேசத்துக்கு, சைக்கிள் பயணத்தை, நேற்று தொடங்கினர். காலை, 8:00 மணிக்கு சேலத்தை கடந்து, வாழப்பாடி, ஆத்தூர் வழியாக, சென்னை நோக்கி பயணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X