பொது செய்தி

தமிழ்நாடு

கடனை ரத்து செய்ய மகளிர் சுய உதவி குழு கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

ஆத்தூர்: கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்களை ரத்து செய்ய, தமிழக அரசுக்கு, மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், பெண்களின் முன்னேற்றம், தனி நபர் வருமான பெருக்கத்துக்கு, மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அனைத்து கிராமங்களிலும், குழுக்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும், 12 முதல், 20 பேர் உறுப்பினராக உள்ளனர். ஒருவர் தலைவராக செயல்படுவார். மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள், கூட்டுறவு, தேசியமயம், தனியார் துறை வங்கிகளில், சேமிப்பு கணக்கு தொடங்கி, கடன் பெறுகின்றனர். அதில், டிபன் கடை, புடவை, மீன் வியாபாரம், தையல் போன்ற சிறு தொழில்களை செய்கின்றனர். மாதந்தோறும், குழு தலைவர் வீட்டில், சுய உதவி குழுக்களின் கூட்டம் நடக்கும். அப்போது, உறுப்பினரிடமிருந்து, கடன் அசல் தொகை, வட்டி மாத தவணை வசூலிக்கப்படும். அவற்றை மொத்தமாக சேர்த்து, குழு தலைவர், வங்கியில் செலுத்துவார். தற்போது ஊரடங்கால், பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதனால், குழுக்களுக்கு, வங்கிகள் வழங்கிய கடன்களை ரத்து செய்ய, அதன் உறுப்பினர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X