பொது செய்தி

தமிழ்நாடு

புலம் பெயர்ந்த 1,829 தொழிலாளர் ம.பி., - உ.பி.,க்கு ரயிலில் அனுப்பிவைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

சேலம்: புலம் பெயர்ந்த, 1,829 தொழிலாளர்களை, மத்திய, உத்தர பிரதேச மாநிலங்களுக்கு, சிறப்பு ரயிலில், கலெக்டர் ராமன் வழியனுப்பி வைத்தார்.
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களிலிருந்து, தமிழகம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விருப்பத்தின் பேரில், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு, நேற்றிரவு, சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், அடுத்தடுத்து நடந்தது. அதற்கான சிறப்பு ரயிலை, கலெக்டர் ராமன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அதில், மத்திய பிரதேசத்துக்கு, 415 பேர், உத்தர பிரதேசத்துக்கு, 82 குழந்தைகள் உள்பட, 1,414 பேர், சொந்த ஊர் புறப்பட்டனர். இதில், சேலத்தில், 201, கள்ளக்குறிச்சி, 36, பெரம்பலூர், 51, விழுப்புரம், 127 என, 415 பேர், மத்திய பிரதேசம்; சேலம் தாலுகா, 346, மேற்கு, 439, தெற்கு, 208, வாழப்பாடி, 50, ஏற்காடு, 8, ஆத்தூர், 56, கெங்கவல்லி, 10, இடைப்பாடி, 16, சங்ககிரி, 212, மேட்டூர், 31, ஓமலூர், 38 பேர் என, 10 தாலுகாவிலிருந்து, 1,414 பேர், உத்தர பிரதேசத்துக்கு புறப்பட்டனர். காடையாம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிலிருந்து, இரு மாநிலங்களைச் சேர்ந்த, ஒருவர் கூட, சொந்த ஊர் போகவில்லை.

கலெக்டர் ராமன் கூறியதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவரவர் சொந்த ஊருக்கு, அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளான, 19ல், ராஜஸ்தானுக்கு, 347 பேர் சென்றனர். இரண்டாம் நாளான இன்று(நேற்று) ம.பி., - உ.பி.,க்கு, 1,829 பேர், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அனைவருக்கும், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள், ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர, பஸ், குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது. சொந்த ஊர் திரும்ப, விருப்பம் தெரிவிக்கும் அனைத்து தொழிலாளர்களும், அடுத்தடுத்து அனுப்பிவைக்க, தொடர் ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X