பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

இடைப்பாடி: இடைப்பாடியிலுள்ள, பெரியார் பல்கலை உறுப்பு கல்லூரியில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இடைப்பாடி அரசு கல்லூரியில், 2020 - 21ம் ஆண்டு இளநிலை படிப்புக்கு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், அசல் சாதி சான்றிதழுடன் வந்து, அதன் நகலை கொடுத்து, 10 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியும், இதர மாணவர்கள், 60 ரூபாய் பதிவு, விண்ணப்ப கட்டணம் செலுத்தியும், படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X