சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயுதப்படை ஏட்டு மாரடைப்பால் சாவு

Added : மே 21, 2020
Share
Advertisement

சேலம்: வடமாநில தொழிலாளர்களை வழியனுப்பும் பணியில் ஈடுபட்ட, ஆயுதப்படை ஏட்டு மாரடைப்பால் இறந்தார். கெங்கவல்லியைச் சேர்ந்தவர் சுந்தர், 46. இவரது மனைவி உமாராணி, 42. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சுந்தர், 1995 போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று, சேலம் மாநகர ஆயுதப்படை, வாகன பிரிவில், பறக்கும் படை வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று, சேலத்திலிருந்து ரயில்மூலம், உத்தர பிரதேச தொழிலாளர்களை வழியனுப்பி வைக்கும் விழா நடந்தது. அதன் பாதுகாப்பு பணிக்கு, போலீசாரை அழைத்துச்சென்ற இவர், ஜங்ஷன் வளாகத்தில், திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை, போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X