பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புதலுக்கு பின் தேர்வு நடத்த அறிவுரை

Added : மே 21, 2020
Share
Advertisement

சேலம்: திருப்புதலுக்கு வாய்ப்பளித்த பின், 10ம் வகுப்பு தேர்வை நடத்த, தி.மு.க., அறிவுறுத்தியுள்ளது. தி.மு.க., மாணவரணி மாநில துணை செயலர் தமிழரசன் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள், நேற்று, சேலம், முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியிடம் அளித்த மனு: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 15 நாள் தள்ளி வைக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். உயர் கல்வித்துறை தேர்வு, ஜூலையில் நடக்கும்போது, 10ம் வகுப்பு தேர்வுக்கு மட்டும் ஏன் அவசரம். சி.பி.எஸ்.சி., பள்ளி தேர்வுபோல், 10ம் வகுப்பு தேர்வையும் நடத்த வேண்டும். மாணவ, மாணவியரை, கவனமாக கையாண்டு, தொற்றிலிருந்து காப்பாற்றினால் மட்டுமே, தேர்வு பணி நிறைவு பெறும். அதனால், பள்ளி திறந்த பின், அவகாசம் அளித்து, மாணவர்கள், தங்கள் பாடங்களை நல்ல முறையில் திருப்புதல் செய்ய வாய்ப்பளித்த பின், தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X