சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தல்: 'போக்சோ'வில் விவசாயி கைது

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தலைவாசல்: மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில், போக்சோவில், விவசாயி கைது செய்யப்பட்டார். தலைவாசல், தென்குமரையைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன், 26; விவசாயியான இவர், அவரது உறவினரின், 16 வயது மகளான, பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்தார். அவர், கடந்த ஏப்., 16ல் மாயமானார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் புகார்படி, தலைவாசல் போலீசார் தேடிய நிலையில், ஏப், 18ல் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது, மாயக்கண்ணன் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வர, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. தலைமறைவாக இருந்த மாயக்கண்ணனை, போலீசார் தேடி வந்தனர். நேற்று, தென்குமரையிலுள்ள உறவினர் வீட்டுக்கு மாயக்கண்ணன் வந்தார். இதையறிந்த போலீசார், அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மே-202005:06:58 IST Report Abuse
Mani . V என்னய்யா வயித்தெரிச்சலாக இருக்கு. நாட்டில் சுதந்திரமாக ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முடிகிறதா? காமப் பிரியர்களுக்காக (மது பிரியர்கள் மாதிரி) சட்டத்தில் நிறைய மாற்றம் கொண்டு வந்து அவர்கள் பொலிகாளைகள் போல் திரிய போதிய ஏற்பாடு செய்ய வேண்டும் (போங்கய்யா நீங்களும், உங்கள் சட்டமும்).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X