மாணவி கடத்தல்: போக்சோவில் விவசாயி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தல்: 'போக்சோ'வில் விவசாயி கைது

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share

தலைவாசல்: மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில், போக்சோவில், விவசாயி கைது செய்யப்பட்டார். தலைவாசல், தென்குமரையைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன், 26; விவசாயியான இவர், அவரது உறவினரின், 16 வயது மகளான, பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்தார். அவர், கடந்த ஏப்., 16ல் மாயமானார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் புகார்படி, தலைவாசல் போலீசார் தேடிய நிலையில், ஏப், 18ல் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது, மாயக்கண்ணன் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வர, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. தலைமறைவாக இருந்த மாயக்கண்ணனை, போலீசார் தேடி வந்தனர். நேற்று, தென்குமரையிலுள்ள உறவினர் வீட்டுக்கு மாயக்கண்ணன் வந்தார். இதையறிந்த போலீசார், அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X