ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.என்.ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் சார்பில் நிர்வாகிகள் பாண்டியன், மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் மனு வழங்கினர். பின், அவர்கள் கூறியதாவது:இச்சங்கத்தின் ஈரோடு கிளையில், 1,350 குடும்பங்களை சேர்ந்த டிரைவர்கள் உள்ளனர். ஊரடங்கால், கார்கள், டாக்ஸி, லாரி உள்ளிட்ட எந்த வாகனமும் இயங்கவில்லை. இதனால், டிரைவர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டு, வருவாய்க்கு வழி இல்லை. டிரைவர்கள், அவர்களது குடும்பத்தார் வாழ்வாதாரம் பாதித்துள்ளனர். எனவே, இச்சங்கத்தில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், நிதியுதவி வழங்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE