ஈரோடு: ஈரோட்டில், மூன்றாம் நாளாக டெங்கு ஆய்வு நடந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு, பச்சை மண்டலமாக மாறி உள்ள ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கு விதிமுறைகள் சற்று தளர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். வீடுகளில், தண்ணீர் தொட்டிகள் சுத்தமாக இருக்கின்றனவா, மழை நீர் தேங்கும் வகையில் இடங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்தார். தொட்டிகளில், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகின்றனவா என்பது குறித்தும் சோதனை செய்தனர். இரண்டாவது மண்டல உதவி கமிஷனர் விஜயகுமார், இளநிலை பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE